செய்திகள்

ஶ்ரீ.ல.சு.கவில் போட்டியிட தான் இடம் கேட்கவில்லை : மஹிந்த தெரிவிப்பு

எதிர்வரும் தேர்தில் போட்டியிடுவதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தனக்கென இடம்கேட்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு அபயாராம விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர்  இதனை தெரிவித்துள்ளார்.
தான் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம் கேட்கவில்லை. நான் எப்போதும் உண்மையான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் காரனே. நான் மக்களை சந்திப்பதற்காகவே விகாரைகளுக்கு செல்கின்றேன். தேர்தல் வரட்டும் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.