செய்திகள்

ஶ்ரீ.ல.சு.கவை சேர்ந்த மேலும் 5பேருக்கு பிரதி அமைச்சு பதவிகள்?

இன்று அல்லது நாளை ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து மேலும் 5 பேர் பிரதி அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறாக திலங்க சுமதிபால , விஜய தஸநாயக்க ,விக்டர் எந்தனி ,எரிக்வீர வர்டன மற்றும் டுலிப் விஜேசேகர ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இன்று அல்லது நாளைய தினம் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் 25 பேர் அமைச்சர்களாகவும் , பிரதி அமைச்சர்களாகவும் மற்றும் இராஜங்க அமைச்சர்களாகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.