செய்திகள்

ஶ்ரீ.ல.சு.கவை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் ஐ.தே.க : எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சீர்குலைக்கும் நோக்கத்திலேயே  ஐக்கிய தேசிய கட்சி செயற்பட்டுவருவதாக  எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஶ்ரீ லங்கா சுதநதிரக் கட்சி தலைமையகத்ததில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரைரயாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் எம்.பிக்களை கைது செய்து கட்சியை பலவீனப்படுத்தி கட்சியை சீர்குலைக்கும் நோக்கத்திலேயே ஐக்கிய தேசிய கட்சி செயற்படுகின்றது. இதற்கு எமது எதிர்ப்பை வெளியிடுகின்றோம். எந்நவொரு நபர் தொடர்பாகவும் முறையாக விசாரணை நடத்துவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை ஆனால் விசாரணையென்ற பெயரில் பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதனை நாம் எதிர்க்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.