செய்திகள்

ஶ்ரீ.ல.சு.க உறுப்பினர்கள் சிலர் மஹிந்தவுக்கு எதிராக அன்ன சின்னத்தில் களமிறங்க தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்‌ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு அனுமதியளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பாக அதிருப்தி கொண்டுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று வேறு கூட்டணி கட்சியுடன் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கிய புதிய ஜனநாயக கட்சியின் அன்னம் சின்னத்தில்  அவர்கள் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக செயற்பட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.