செய்திகள்

ஷரபோவாவை தோற்கடித்து அவுஸ்திரேலிய ஓபின் கிண்ணத்தை வென்றார் ஷெரீனா

அவுஸ்திரேலிய ஓபின் டெனிஸ் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையான ஷெரீனா வில்லியம்ஸ் அவரை எதிர்த்தாடிய ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவாவை 6-3 7-6 (7-5) செட் கணக்கில் தோற்கடித்து பிரமிப்பூட்டும் வெற்றியை பெற்றுள்ளார்.

இருமல் மற்றும் வாந்தி ஆகியவற்றினால் அவஸ்தையுற்றபோதிலும் மிகவும் சிறப்பாக விளையாடிய ஷெரீனா தனது 6 ஆவது அவுஸ்திரேலிய ஓபின் டெனிஸ் பட்டத்தையும் 19 ஆவது கிரான் ஸ்லாம் பட்டத்தையும் வென்றார்.

உலகின் முதலாவது இடத்தில் இருக்கும் ஷெரீனா இரண்டாவது இடத்தில் இருக்கும் ஷரபோவாவை 2004 ஆம் ஆண்டு முதல் இதுவரை 16 தடவைகள் தோற்கடித்துளார்.