செய்திகள்

ஷரியா சட்டத்தால் 20 பேர் கொல்லப்பட்டனரா? அபேதிஸ்ஸ தேரரின் தகவல்கள் பற்றி சீ.ஐ.டி விசாரணை

இலங்கையில் ஷரியா சட்டத்தின் கீழ் 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மெதகொட அபேதிஸ்ஸ தேரரினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக சீ.ஐ.டி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்பித்துள்ள அறிக்கையொன்றில் கடந்த காலங்களில் ஷரியா சட்டத்தை பயன்படுத்தி 20பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் காணப்படுவதாக கடந்த வியாழக்கிழமை நுகேகொட நகரில் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தகவல் வெளியிட்டிருந்தார். -(3)