செய்திகள்

ஷிராந்தி ராஜபக்‌ஷ இன்று நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு செல்வார்? விசாரணைக்கு எதிராக நேற்று அம்பாந்தோட்டையில் ஆரப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்‌ஷவின் பாரியரான ஷிராந்தி ராஜபக்‌ஷவை  இன்றைய தினம் நிதி மோசடி பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இன்று காலை அவர் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் ஷிராந்தி ராஜபக்‌ஷ நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அம்பாந்தோட்டை நகரில் ஆர்ப்பாட்ட பேரணியோன்று  நடத்தப்பட்டுள்ளது. ஷிராந்தி ராஜபக்‌ஷவை பாதுகாப்போம் , அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிராக அணித் திரளுவோம் என பதாதைகளை ஏந்தியவாறு அங்கு ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
இதேவேளை  தனது தாயை நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு விசாரணைக்காக அழைத்துள்ளமை தொடர்பாக  பேஸ்புக் பக்கததில் பதிவொன்றை இட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ  ” தனது தாய் அரசியல்வாதியல்ல. இந்த அரசாங்கம் நல்லாட்சி என கூறிக்கொண்டு பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. நானும் தந்தையும் அரசியல்வாதிகள் நாங்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார். ஆனால் எனது தாயும் , சகோதரனும் அரசியல்வாதிகள் இல்லை அவர்களை விட்டுவிடுங்கள் ” என தெரிவித்துள்ளார்.