செய்திகள்

ஷிராந்தி ராஜபக்‌ஷ நடத்திய நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ ஆகியோர் நடத்தி வந்த அரசு சார்பற்ற நிறுவனங்களின் வங்கி கணக்குகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ளன.

ஷிரந்தி ராஜபக்ஷ நடத்தி வந்த சிவில் லிய சவிய நிதியத்தின் 103.8 மில்லியன் ரூபாயும் புஷ்பா ராஜபக்ஷ நடத்திய நிறுவனத்தின் 43 லட்சம் ரூபாயும் இந்த வங்கி கணக்குகளில் உள்ளன.

குறித்த வங்கி கணக்குகளின் காணப்படும் சந்தேகம் காரணமாக தற்போது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ஷிரந்தி மற்றும் புஷ்பா ராஜபக்ஷ ஆகியோரிடம் நிதி குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு விரைவில் விசாரணைகளை நடத்தவுள்ளது.

ஷிரந்தி வைத்திருக்கும் வங்கி கணக்கை ஆரம்பிக்க போலியான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை தவிர ஷிரந்தி ராஜபக்சே நடத்தி வரும் கால்டன் முன்பள்ளிகள் மூலம் முறைகேடாக பணம் சம்பாதிக்கப்படுவதாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.