செய்திகள்

ஸ்பெயினில் பாரிய தேடுதல் நடவடிக்கை

ஸ்பெயினில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்த 8 இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினின் பல பகுதிகளில் இன்று இடம்பெற்ற பாரிய தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்கள்சிரியா மற்றும் ஈராக்கிற்கு அனுப்புவதற்காக நபர்களை சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் உள்ளதாகவும், இவர்கள் சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து செயற்படும் ஐஎஸ் உறுப்பினருடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்ததாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.கைதுசெய்யப்பட்ட அனைவரும் ஸ்பெயின் பிரஜைகள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட குழுவினரால் ஸ்பெயினின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய ஆபத்து ஏற்படவிருந்ததாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளதுடன் அவர்கள் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
பிரான்சில் ஜனவரியில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பின்னர் ஸ்பெயின் அரசாங்கம் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை இவ்வருடத்தில் அந்த நாட்டில் இடம்பெற்றுள்ள தேடுதல் நடவடிக்கைளில் 23 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதமேந்திய பொலிஸார் தங்கள் வீட்டிற்குள் நுழைந்து ஏனையவர்களை அறையொன்றினுள் பூட்டிவைத்த பின்னர் தனது 18 வயது மகனை கைசெய்ததாகவும், மகனின் கணணிபாகங்களை எடுத்துச்சென்றதாகவும் கைதுசெய்யப்பட்ட ஓருவரின் தாயர் தெரிவித்துள்ளார்.
2004 ம் ஆண்டு ஸ்பெயினில் பயணிகள் புகையிரதம் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில்200 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.