செய்திகள்

ஸ்மிருதி இரானிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் …

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தவிடயம் தொடர்பில் ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவிக்கும்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா கைது ஆகிய விவகாரங்கள் தொடர்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ரோஹித் தொடர்பாக அவரது தாய் ராதிகா தெரிவித்துள்ள கருத்திலிருந்து அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து முரண்பட்டதாக உள்ளது. இந்த நிலையில் ஸ்மிருதி ரானிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

N5