செய்திகள்

ஸ்ரீ.சு.கவில் ஒழுக்கம் பேணாதவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க திட்டம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் ஒழுக்கத்தை மீறுபவர்கள் தொடர்பாக விரைவில் தீர்மானமெடுக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட ஸ்ரீ லங்கா சதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே சந்திரிக்கா இதனை தெரிவித்தள்ளார்.
கட்சியின் ஒழுக்கத்தை பேணாது செயற்படும் நபர்களுக்கு எதிராக நடவடிக்ககையெடுக்கும் வகையில் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியினால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதுவரை அத்தகையவர்களுக்கு சந்ததர்ப்பமொன்றை வழங்கியுள்ளோம். வேண்டுமென்றால் கட்சியுடன் கதைத்து வேலைகளை செய்யுங்கள். என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.