செய்திகள்

ஸ்ரீ.ல.சு கட்சியின் மே தினக் கூட்ட மேடையில் மைத்திரி , மகிந்த , சந்திரிக்காவை ஏற்ற முயற்சி

ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் மே தினக் கூட்டத்தை கொழும்பு  ஹைட்பார்க் மைதானத்தி;ல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்படடுள்ளதுடன் அந்த கூட்டத்தின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரையும் ஒரே மேடையில் ஏற்றும் முயற்சியில் அந்த கட்சி ஈடுபட்டுள்ளது.
இதற்கான அழைப்பு கடிதத்தை அவர்கள் இருவருக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் விமல் , வாசு , தினேஸ் மற்றும் கம்மன்பில தலைமையிலான கட்சிகளும் மே தினக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதுடன் அந்த மேடையில் மஹிந்தவை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. என்பதும் குறிப்பிடத்தக்கது.