செய்திகள்

ஸ்ரீ.ல.சு.கவின் யோசனையை ஆராய கால அவகாசம் வேண்டும்: அரசாங்கம் தெரிவிப்பு

தேர்தல் திருத்தம் தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை ஆராய்வதற்காக தமக்கு மேலும் கால அவகாசம் வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் தயாரிக்கப்பட்ட தேர்தல் திருத்தம் தொடர்பான அறிக்கை நேற்று அனைத்து கட்சி பிரதானிகளின் கூட்டத்தின் போது அரசியில் கட்சி பிரதிநிதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அதில் அரசியலமைப்பு திருத்தம் செயற்படுத்தப்பட்டதும் 3 மாதத்திற்குள் தொகுதிகளை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவை அமைத்தல் உட்பட தேர்தல் திருத்தம் தொடர்பான விடயங்கள குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக தமக்கு உடனடியாக எதுவும் கூற முடியாதெனவும் குறித்த யோசனை தொடர்பாக ஆராய்வதற்கு காலம் தேவையெனவும் சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.