செய்திகள்

ஸ்ரீ.ல.சு.கவில் முடியாவிட்டால் மாற்று அரசியல் கட்சியை நாட தயார் : பந்துல

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது போட்டியிடுவதற்காக மாற்று அரசியல் கட்சியொன்றை தேரிவு செய்ய வேண்டிய தேவையேற்பட்;டால் அதற்கு தயங்கப்போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்து முன்னோக்கி கொண்டு செல்வதற்காக தான் அடங்களாக குழுவினர் முயற்சித்து வருவதாகவும் அது முடியாது போகுமாகவிருந்தால் மாற்றுக்கட்சியொன்றை எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது தெரிவு செய்வதற்கு ஒருபோதும் தயங்கப்போவதில்லை என  தெரிவித்;துள்ளார். சிங்கள ஊடக மொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.