செய்திகள்

ஸ்ரீ.ல.சு.க எம்.பிக்கள் சிலர் மஹிந்த ஆதரவு தரப்பு கூட்டத்தில் : மஹிந்த செல்லவுள்ளதாக தகவல்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான மே தினக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு தரப்பினர் அந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளாது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மஹிந்த ஆதரவு பங்காளிக்கட்சிகள் இணைந்து நடத்தவுள்ள கூட்டத்தில் கலந்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதன்படி அந்த கட்சியின் எம்.பிக்களான  டி.பி.ஏக்கநாயக்க , எஸ்.பி.சந்திரசேன , சாலிந்த திஸாநாயக்க , பந்துல குணவர்தன , மஹிந்தானந்த அழுத்கமகே , மேல் மாகண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் கிருளப்பனை அத்துலத்முதலி மைதானத்தில் நடைபெறவுள்ள தினேஸ் குணவர்தன , விமல் வீரவன்ச , வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் கிருளப்பனையில் நடக்கவுள்ள கூட்டத்திலேயே மஹிந்த ராஜபக்ஷ  கலந்துக்கொள்வார் என தற்போது செய்திகள் வெளியாகும் போதும் அவர் அதனை இதுவரை உறுதி செய்யவில்லை