செய்திகள்

ஸ்ரீ.ல.சு.க மத்திய செயற்குழுவுக்கு புது முகங்கள் சில

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவில் புதிய உறுப்பினர்கள் சிலரை இணைத்துக் கொள்வதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது.

ஹிருனிகா பிரேமசந்திர, அர்ஜுன ரணதுங்க , சோலங்க ஆராச்சி ஆகியோர் உட்பட சிலரை அந்த குழுவில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் பந்துல குணவர்தன , டி.பி.ஏக்கநாயக்க , எஸ்.எம்.சந்திரசேன சாலிந்த திஸாநாயக்க ஆகியோர் கட்சியின் ஒழுக்கத்தை மீறியதாக தெரிவித்து இந்த கட்சியின் மத்திய செயற் குழுவிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இடங்களுக்கான இடைவெளிகளை நிரப்பும் வகையிலேயே புதிய முகங்களை செயற்குழுவில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேலும் சில பிரபல உறுப்பினர்களும் அந்த குழுவிலிருந்து நீக்கப்படவுள்தாகவும் புத்தாண்டுக்கு பின்னர் அது இடம்பெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.