செய்திகள்

ஸ்ருதியும் ‘தல’ புராணம் பாடுகிறார்

தல போல வருமா என்று அஜீத் புகழ்பாடுவோர் பட்டியலில் சேர்ந்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாஸன். தல அஜீத் நல்ல மனிதர், பொறுமையானவர், படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் அன்பாக பழகுபவர் என்று ஏற்கனவே கோடம்பாக்கத்தில் ஒரு பெரிய கூட்டமே அவர் புகழ் பாடிக் கொண்டிருக்கிறது. மேலும் அவர் தனது கையால் சமைக்கும் பிரியாணியின் சுவைக்கு பல நடிகர், நடிகைகள் அடிமையாகியுள்ளனர். இந்நிலையில் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாஸன்.