செய்திகள்

ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத் இடை நிறுத்தம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர்  ஹசன் அலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் இடைநிறுத்தப்படலாமெனக் கூறப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெள்ளிக்கிழமை இருவரை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இன்று சனிக்கிழமை நள்ளிரவுக்குள் இன்னும் சிலரைக் கட்சியிலிருந்து  இடைநிறுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
பாலமுனையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் 19 ஆவது மாநாட்டில் இறுதி உரையின்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
ஹக்கீமின் இந்த உரையின்போது ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் பெயர்களை அவர் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் மறைமுகமாக மேற்படி இருவரையும் தாக்கிப் பேசியதை அவதானிக்க முடிந்தது.
n10