செய்திகள்

ஹசியின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணி பெங்களூரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

 

ஐ.பி.எல்பின் 2-வது தகுதிச்சுற்று நேற்று ராஞ்சியில் நடைபெற்றது இதில்சென்னை- பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வென்ற தோனி பீல்டிங் தேர்வு செய்தார்.அதனைத்தொடர்ந்து பெங்களூர் அணியின் கெய்ல்- கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சென்னை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் ஹசி சுமித் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சுமித் 12 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். அடுத்து டுபிளிசிஸ் களம் இறங்கினார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இதனால் சென்னை அணியின் நிலைமை உயர்ந்தது. டுபிளிசிஸ் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரெய்னா ஓட்டம்பெறாமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

4-வது விக்கெட்டுக்கு ஹசி உடன் தோனி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடி ஹசி அரை சதம் அடித்தார். 56 ஓட்டங்களில் ஹசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நெஹி விரைவாக ஓட்டங்களை பெற்றார்..19-வது ஓவரில் நெஹி பிராவோ ஆட்டமிழக்க கடைசி ஓவரில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் 3 பந்தில் 4 ரன்கள் எடுத்த தோனி 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி இரண்டு பந்தில் ஒரு ஓட்டம் தேவைப்பட்டது. அஸ்வின் 5-வது பந்தில் ஒரு ஓட்டத்தை பெற சென்னை அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது