செய்திகள்

ஹட்டனில் இருந்து நீர்கொழும்பு போய் வந்த இருவரின் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலில்

ஹட்டனில் இருந்து வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இருக்கும் நீர்கொழும்பு நகருக்கு சென்று வந்த வர்த்தகர் , அவரின் சாரதி மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அடங்கலாக 8 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த வர்த்தகர் அவரின் சாரதியுடன் ஊரடங்கு சட்ட காலத்தில் பயணிப்பதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டு அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதற்காக நீர்கொழும்பு நகருக்கு சென்று வந்துள்ள நிலையில் அது தொடர்பாக தகவல் அறிந்த சுகாதார அதிகாரிகள் அவர்கள் இருவரையும் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளனர்.
ஹட்டன் ஹிஜ்ராபுர பகுதியை சேர்ந்த வர்த்தகருரம் அவரின் மனைவி , பிள்ளைகள் அடங்கலாக நான்கு பேரும் மற்றும் ஹட்டன் வீடமைப்பு வீதியில் வசிக்கும் சாரதியும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இவ்வாறாக 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். -(3)