செய்திகள்

ஹட்டனில் காடு தீப்பற்றி 3 ஏக்கர் வரை முற்றாக நாசம் ( படங்கள்)

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் 08.06.2015 அன்று பிற்பகல் 2 மணியளவில் குறித்த காடு தீப்பற்றி 3 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
யாராவது இதற்கு தீ வைத்திருப்பார்கள் என அட்டன் பொலிஸார் சந்தேகப்படுகின்றனா்.
அட்டன் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த ஏற்பட்ட தீ சம்மந்தமான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனா்.
DSC09428 DSC09430 DSC09431