செய்திகள்

ஹட்டனில் தரவளை பிரதேசம் மூடப்பட்டது

ஹட்டன் டிக்கோயா பிரதேசத்திற்குற்பட்ட தரவளை பகுதி எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில தினங்களுக்கு முன்னர் டிக்கோயா தரவளை பிரதேத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையில் ஈடுபட்ட போதகர் உட்பட 08 பேர் தேவாலயத்தினுள் கொரோனா தொற்று அபாயம் காரணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதனை தொடர்ந்து அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை அடையாளம் காணும் வகையில் தரவளை கீழ்ப்பிரிவு பிரதேசம் பொலிஸாரினால் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியை சேர்ந்த 200 குடும்பங்கள் வெளி பிரதேசத்திற்கு செல்வதோ வெளியார் உள்நுளைவதோ 14 நாட்களுக்கு முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)