செய்திகள்

ஹட்டனில் ரயிலில் மோதுண்டு இளைஞர் பலி (படங்கள்)

ஹட்டன் பொலிஸ் பிரிவில் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலில் 17.04.2015 அன்று இரவு 11.30 மணியளவில் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

ரயிலில் மோதுண்ட குறித்த இளைஞனை ஹட்டன் புகையிரத நிலையத்தில் பணிப்புரியும் ஒருவா் கண்டு பொலிஸாருக்கு அறிவித்த பின் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு சென்றுள்ளனா்.

தலை பகுதியில் அடிப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் 28 வயது மதிக்கதக்கவர் எனவும் இவரின் பெயர், இடம் எதுவும் இன்னும் கண்டறியப்படவில்லை என விசாரணைகளை மேற்கொள்ளும் ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

குறித்த இளைஞன் ரயில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டதா அல்லது தற்கொலையா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.

சடலம் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

DSC09792

DSC09796