செய்திகள்

ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு!

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால் நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பிரதேசத்தில் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக அந்த பிரதேசத்தை தனிமைமப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை டிக்கோயா உள்ளிட்ட பிரதேசங்களில் இன்றைய தினத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. -(3)