செய்திகள்

ஹட்டன் -பலாங்கொடை பஸ் சேவை ஆரம்பம்

அட்டனிலிருந்து வெளிஓயா செல்வதற்கும் அட்டனிலிருந்து பலாங்கொடை செல்வதற்கும் 24.05.2015 அன்று மாலை முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு புதிய பஸ்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கே.கே. பியதாஸவின் வேண்டுகோள்க்கு இணங்க இலங்கை போக்குவரத்து சபை இந்த 2 புதிய பஸ்களை அட்டன் டிபோக்கு வழங்கியது. இந்த 2 பஸ்களின் பெருமதி சுமார் 40 இலட்சம் ஆகும்.

மக்களுக்காக இந்த பஸ்களை 24.05.2015 அன்று முதல் போக்குவரத்துக்கு விடப்பட்டுள்ளது.
இதன்போது ஜக்கிய தேசிய கட்சியின் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

DSC09419 DSC09435