செய்திகள்

ஹட்டன் வாகன சாரதிகள் சங்கத்தினர் ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டனர்

ஜக்கிய தேசியக் கட்சியின் மஸ்கெலியா தொகுதியின் அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கே.கே பியதாஸவுக்கு எதிராக, ஹட்டன் வாகன சாரதிகள் சங்கத்தினர் இன்று  செவ்வாய்க்கிழமை கறுப்புக் கொடி ஏந்தி ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டனர்.

தங்களுக்கு உரித்தான வாகனம் நிறுத்தும் இடத்தை மேற்படி உறுப்பினர், முன்னாள் வாகன சாரதிகள் சங்கத்தின்  தலைவரிடமிருந்து ஏமாற்றி பெற்றுள்ளதாகவும் தற்போது தங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரிவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், பல வருட காலங்களாக தாங்கள் இவ்விடத்தில் வாகனங்களை நிறுத்தி வைப்பதாகவும் தற்போது, வெளியேற சொல்வது நியாயமற்ற செயல் எனவும் அவர்கள்  தெரிவித்தனர்.

இது தொடர்பாக உறுப்பினர் கே.கே.பியதாஸவிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,

குறித்த வாகன சங்கத்தின் தலைவரிடமிருந்து சட்ட பூர்வமாக தான் பணம் கொடுத்து குறித்த இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் எனவே, தற்போது மேற்படி இடம் தனக்கு சொந்தமானதென அவர் தெரிவித்தார்.

DSC07389

DSC07392

DSC07395

DSC07396

vlcsnap-2015-03-17-10h26m17s222

vlcsnap-2015-03-17-10h26m32s111