ஹம்பாந்தோட்டை கடலில் மூழ்கி மூவர் பலி
ஹம்பாந்தோட்டை, பழைய தங்காலை வீதியிலுள்ள கடலில் மூழ்கிய மூன்று பிள்ளைகள் மற்றும் அவர்களின் தாய் உட்பட நால்வரில், மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 மற்றும் ஒன்றரை வயதான இரண்டு ஆண் பிள்ளைகளும் 6 வயதான பெண் பிள்ளையும் 31 வயதான தாயுமே கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது கடலில் மூழ்;கியுள்ளனர்.
இவர்களில், மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 6 வயதான பெண் பிள்ளையை தேடிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டையிலுள்ள திருமண வீட்டுக்கு சென்ற போதே இவ்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.