செய்திகள்

ஹரீன் பெர்ணான்டோவிற்கு எதிரான கோரிக்கை நிராகரிப்பு

ஊவா மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து ஹரீன் பெர்ணான்டோவை நீக்கி இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு, விடுக்கப்பட்ட கோரிக்கையை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
எனினும் மனு குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளன.

ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான சஜிந்ர ராஜபக்ஷவை நீக்கி, ஹரீன் பெர்ணான்டோவை அப் பதவிக்கு நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் மனுத் தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மீதான ஆரம்ப விசாரணைகளின் பின், எதிர்வரும் ஜூன் 15ம் திகதி மீண்டும் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.