ஹல்துமுல்லையில் பாரிய மண்சரிவு: உயிர் சேதங்கள் இல்லை (படங்கள்)
பதுளை ஹல்துமுல்லை பிரதேசத்தில் 5 ஏக்கர் நிலப்பகுதி மண்சரிவுக்குள்ளாகியுள்ளது.
நிக்கபொத்த தமனியதென்ன பகுதியிலுள்ள மக்கள் வசிக்காத இறப்பர் தோட்டமொன்றிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் இதனால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லையென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த மண்சரிவு தொடர்பாக கட்டிட ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.