செய்திகள்

ஹிட்லரின் பொலிஸ் பிரிவு இலங்கையில் : மஹிந்த கூறுகின்றார்

ஹிட்லர் காலத்தை போன்ற ‘கெஸ்டபோ ‘ பொலிஸ் பிரிவே அமைச்சரவை உப குழுவினால் அமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான எதிரணியினரின் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக மஹிந்த ராஜபக்‌ஷவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மையில் அமைச்சரவையின் உப குழுவிற்கு பொறுப்புக் கூறக் கூடிய வகையில் அமைக்கபட்ட ‘கெஸ்டாபோ ‘பிரிவை ஒத்த பொலிஸ் பிரிவினூடாக இந்த அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை சிறைபிடிக்கின்றது.  இவ்வாறாக தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பொய் பிரச்சாரங்கள், பாரிய அளவிலான ஊழல்கள் மற்றும் இதுவரை இல்லாத வகையிலான அரசியல் விரோதிகளின் வேட்டை இந்த நம்பிக்கையில்லா பிரேரணை யோசனைக்கு காரணம் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.