செய்திகள்

ஹென்போல்ட் தோட்ட புதிய முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் (படங்கள்)

லிந்துலை – ஹென்போல்ட் தோட்டத்தின் புதிய முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் 20ம் திகதி ஆரம்பமாகி 22ம் திகதி வௌ்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

20ம் திகதி கலசம் வைத்து யாக பூஜை இடம்பெற்றதோடு 21ம் திகதி எண்ணெய்காப்பு இடம்பெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தெய்வச் சிலைகளுக்கு எண்ணெய் சாத்தினர். 22ம் திகதி வௌ்ளிக்கிழமை கணபதி வழிபாடு நடைபெற்று மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.
Kovil (1) Kovil (2) Kovil (3) Kovil (6) Kovil (8) Kovil (9) Kovil (11) Kovil (13)