செய்திகள்

ஹெரோயினுடன் கொழும்பில் ஒருவர் கைது!

50 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் கொழும்பில் ஒருவர் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து, கொழும்பு தொடலங்கை (பாலத்துறை) பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

N5