செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்!

இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரின் கேப்டன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொத்தமாக இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 14 பேர் ஹெலிகாப்டரில் பயணித்ததாக கூறப்படுகிறது .

ஊட்டியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் காட்டேரி மலை முகட்டில் மஞ்சப்பா சத்திரம் பகுதியில் விபத்து முற்பகல் 11.20 மணிக்கு நிகழ்ந்ததுள்ளது.

இந்த விபத்து நடைபெற்ற பகுதியானது குறுகலான ஒரு மலை பகுதி எனவும் அந்த இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்வதில் சிக்கல் நிலை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது .

அங்கு முதன்முதலாக ஹெலிகாப்டரில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் அங்கு இருந்த பொதுமக்கள் தான் ஈடுபட்டுள்ளனர் .

இருந்தபோதும் தீப்பற்றி எரிந்ததால் தீயை அணைக்க முடியாமல் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் தீயை அணைத்தனர்

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளான இடத்திற்கு விமானப் படைத் தளபதி விவேக் ராம் சவுத்ரி நேரில் வந்து ஆய்வு செய்கிறார் .

அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்க சென்ற போதே இந்த விபத்து நேரிட்டதாக சொல்லப்படுகிறது
-(3)