செய்திகள்

‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ நிதியில் மோசடி மஹிந்தவுக்கு எதிராக முறைப்பாடு

2004 சுனாமியின் போது மீள்கட்டுமானத்திற்காக வழங்கப்பட்டிருந்த உதவி நிதியை மோசடியான வகையில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக சேவைகள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் நேற்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிதியல் 82பில்லியன் ரூபா மோடியான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.