செய்திகள்

​2005 ரயில் பெட்டிகளை தயாரித்து ஐசிஎப் சாதனை!

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை ஐசிஎப் ரயில் தொழிற்சாலையில் அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய ரயில் அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது.

சென்னை ஐசிஎப் ரயில் தொழிற்சாலையில் அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய ரயில் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தாண்டு மார்ச் மாதம் வரையிலான ஒரு வருட காலத்தில் 2005 ரயில் பெட்டிகளை தயாரித்து ஐசிஎப் சாதனை படைத்துள்ளது. ஐசிஎப் ஆரம்பித்த 59 வருடத்தில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாக கூறப்படுகிறது. இந்த விழாவில் ஐசிஎப் பொது மேலாளர் அசோக் குமார் அகர்வால் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்

N5