அகிலமும் மூளையும் கட்டமைவு ஒப்பியல்
மருத்துவர் சி. யமுனாநந்தா
அன்றைய விஞ்ஞான ஆய்வுகள் மனித மூளையின் கட்டமைப்பும் அகிலத்தின் கட்டமைப்பும் உருவவியல்ரீதியில் ஒரே தன்மையதாக உள்ளதாக அமைவதாக அவதானித்துக் கணித்து வியப்பில் உள்ளனர். இவற்றை நுணுக்குகுகாட்டி மூலமான மூளையின் ஆய்வின் மூலமும் தொலைக்காட்டி மூலமான வானியில் அவதானிப்புக்கள் மூலமும் ஆராய்ந்து உறுதிப்படுத்தி உள்ளனர். இவ்வாராய்ச்சிகளை இத்தாலி நாட்டைச் சேர்ந்த வானியல் பௌதீக அறிஞர் Franco Vazza உம் நரம்பியல் அறிஞர் Alberto Felettick உம் கணிப்பிட்டு கூறி உள்ளனர். நாம் வாழும் அகிலம் இத்தகைய அகிலமாதிரியில் ஒன்றிலேயே ஆகும். இவ்வாய்வில் வலைப்பின்னல் ஆய்வாளர்களும் (Network Scientists) பங்களித்தனர். இவ்வாய்வுகளின்படி மனித மூளையில் நரம்புக் கலங்களின் வலையமைப்புக் காணப்படுகின்றது. அகிலத்தில் (Universe) உடுத்தொகுதிகளில் வலையமைப்பு (Cosmic Web of galaxiesழளஅiஉ றுநடி ழக பயடயஒநைள) காணப்படுகின்றது. மனித மூளையில் நரம்புக் கலங்களின் வலையமைப்பும் அகிலத்தின் நட்சத்திரங்களின் வலையமைப்பும் ஒரே மாதிரியாகவே தென்படுகின்றது. மனித மூளையில் 100 பில்லியன் நரம்புக் கலங்கள் உள்ளன. இவற்றுக்கு 100 ரில்லியன் நரம்பு இணைப்புக்கள் உள்ளன. நரம்பு இணைப்புக்கள் மூலமே எண்ணங்கள், உணர்வுகள் ஏற்படுகின்றன. மூளையின் திணிவில் 25ம% நரம்புக் கலங்கள் காரணமாகின்றது. மூளையின் திணிவில் 75% நீர் காரணம் ஆகும்.
அகிலத்தின் கட்டமைப்பில் 100 பில்லியன் உடுத்தொகுதிகள் உள்ளன. அகிலத்தின் விரிவும், ஈர்ப்பு அலைகளின் தாக்கமும் அண்ட வலைப்பின்னலை (Cosmic Web) உருவாக்கி உள்ளது. இவை சுருள்வடிவ இழைகளாக காணப்படுகின்றன. அண்டப் பதார்த்தத்தில் 25ம% புலப்படக்கூடியவை. 75% புலப்படாத கரும்பதார்த்தமாகவும் அமைகின்றது. இவ் ஒப்பமைவு மூளையின் கட்டமைவுடன் பொருந்துவது தற்போதைய விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களது ஆய்வின் முடிவுகளின் ஆச்சரியமாகும்.

அகிலத்தின் கட்டமைப்பும் மூளையின் கட்டமைப்பும் உருவவியலில் ஒத்து அமைகின்றன. அளவிடையில் வேறுபாட்டையும் பௌதிகத் தன்மையில் வேறுபாட்டையும் கொண்டு உள்ளன. அளவிடையில் மூளைக் கலங்களிற்கு இடையே தொடர்புகள் ஒரு மைக்கிறோ மீற்றர் தொடங்கி 0.1 மில்லிமீற்றர் வரை காணப்படுகின்றது. அகிலத்தில் அண்டவலைப்பின்னல் 5 மில்லியன் ஒளியாண்டில் இருந்து 500 மில்லியன் ஒளியாண்டு வரையான இடைவெளியில் காணப்படுகின்றது. செயற்பாட்டு ரீதியில் நரம்புக்கலன்களின் ஞாபகச் செயற்பாடுகள் ஐயன்ஸ்டீனின் சார்புக் கோட்பாட்டுக்கு வகைப்படுத்தக் கூடியதாக உள்ளது. அகிலத்தின் செயற்பாடும் சார்ப்புக் கோட்பாட்டில் வகைப்படுத்தக்கூடியதாக உள்ளது.
அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் உள்ள தொடர்பு சைவசித்தாந்தத்தில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. திருமந்திரப்பாடல்கள் பலவற்றில் இதன் சாரம் உள்ளது.
பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலனைந்தும்
பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திருந்தானே. (திருமந்திரம் 466)
பிண்டத்தில் உள்ளுறு புலன்…………..
அண்டத்தின் உள்ளுறு சீவன்
அண்டத்து நாதம்…. என திருமந்திரம் கூறுகின்றது.
இதுவே சைவசித்தாந்தத்தில் பிரணவப் பொருளாக மெஞ்ஞானிகளால் உணர்த்தப்படுகின்றது. ஓம் என்கிற ஓங்கார மெய்ப்பொருள்.
நடராஜப் பெருமானின் ஆனந்தத் தாண்டவம் படைத்தலின் அதிர்விலும் அனவரதத் தாண்டவம் அழித்தலிலும் அதிர்விலும் குறிக்கின்றது.
அண்டத்தின் உள்ளே அளப்பரிதானவன்
பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவன்
குண்டத்தின் உள்ளே குணம் பல காணினுங்
கண்டத்தில் நின்ற கலப்பு அறியார்களே. (திருமந்திரம் 1362)
அண்டத்தில் ஈர்ப்பு அலைகள் வௌ;வேறு அதிர்வெண்ணில் பயணிக்கின்றன. இவை கருந்துளைகளின் பிரவாகத்தில் தங்கி உள்ளன. இரண்டு கருந்துளைகள் ஒன்றிக்கும்போது ஈர்ப்பு அலைகளின் வீச்சு அதிகரிக்கும். இரு கருந்துளைகளுக்கு இடையிலான தூரம் அதிகரிக்கும்போது அக்கருந்துளை-களினால் உருவாகும் ஈர்ப்பு அலைகள் நீளம் அதிகரிக்கும்.
அண்டத்தில் அகிலங்கள் உருவாவதிலும், அகிலங்கள் விரிவடைவதிலும், அகிலங்கள் அழிவதிலும் ஈர்ப்பு அலைகளின் அதிர்வு செல்வாக்குச் செலுத்துகின்றது.
அகிலத்தினதும் மனித மூளையினதும் கட்டமைப்பினை ஒற்றுமையை திருமந்திரத்தில் அண்ட ஆதித்தன், பிண்ட ஆதித்தன் எனப் பொருள்பட அமைந்து உள்ளது.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே. (திருமந்திரம் 1985)
இங்கு விரிசுடர் என்பது உடலில் விளங்கும் சூரியன் பிண்ட ஆதித்தன் ஆகும்.
உணர்வு அது வாயமெ உத்தம மாயும்
உணர்வது நுண்ணறிவு எம் பெருமானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வு உடல் அண்டமும் ஆகி நின்றானே. (திருமந்திரம் 3022)
உடலாக, உணர்வாக, அண்டவெளியாக பரம்பொருள் அமைந்துள்ளதை திருமூலர் கூறுகின்றார். இதனையே தற்போதைய விஞ்ஞான நோக்குனர்களிலும் காண முடிகின்றது.




