அக்சரா ஹாசன் உதவி இயக்குனராக அறிமுகமாகின்றார்
நடிகர் கமலஹாசனின் இரண்டாவது மகளான அக்சரா ஹாசன் கமல் நடிக்கும் படமான சபாஸ் நாயுடு என்னும் படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமாகின்றார். இப்படத்தில் கமலின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் முதல்முறையாக தந்தையுடன் சேர்ந்து நடிகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே 16-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்குகின்றது அங்கேயே 80% படப்பிடிப்பும் நடைபெறவுள்ளது.
இப் படத்தினை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்குகின்றார் என்பதுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவழி நடிகரான மனு நாராயண் என்பவரும் நடிக்கவுள்ளார். கமலின் இந்தப் படத்தை ஒரே நேரத்தில் தமிழ் , தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது .




