செய்திகள்

அங்கவீனமுற்ற இராணுவத்தினர் வீதி மறியல் போராட்டம் : கொழும்பில் கடும் வாகன நெரிசல்

அங்கவீனமுற்ற ஓய்வு பெற்ற இராணுவத்தினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று கொழும்பில் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.
ஓல்கோட் மாவத்தை பகுதியில் வீதியில் அமர்ந்து இவர்கள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தால் புறக்கோட்டை பகுதியில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. -(3) DSC_1349 DSC_1366 DSC_1382