செய்திகள்

அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் போராட்டம் தொடர்பாக ஆராய சட்டம் ஒழுங்கு அமைச்சால் குழு நியமனம்

ஜனாதிபதி  செயலகத்திற்கு முன்னாள் நேற்று முன்தினம் இடம்பெற்ற அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவத்தினரின் ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக  மூவர் அடங்கிய குழுவொன்று சட்டம் ஒழுங்கு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமையவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கையெடுத்திருந்த போதும் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதன் பின்னணி மற்றும் அந்த ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை தாக்குதல்கள் தொடர்பாக அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. -(3)