அச்சவெலியில் வீடொன்றில் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் – அச்சவெலி பகுதியில் வீடொன்றில் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்த பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த பெண், அச்சுவெலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இருவர் முகங்களை துணியால் மறைத்து கொண்டு வீட்டினுள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
மேலும், வீட்டு கண்ணாடி மற்றும் பொருட்களை அடித்து நொருக்கியுள்ளனர். அதன் பின்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனடிப்படையில், சத்தம் கேட்டு ஓடிவந்த அயல் வீட்டார், 42 வயதுடைய குறித்த தாயை வைத்தியசாலையில் அனுமதித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
-(3)




