செய்திகள்

அச்சுறுத்தும் வகையில் வடிகாண் அமைப்பு வேலைகள்: மக்கள் பாதிப்பு

மன்னார் -குழந்தையேசுபுரம் பகுதியில் வடிகான் அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் வடிகானுக்காக வெட்டப்பட்டு பள்ளம் பாதுகாப்பான முறையில் காணப்படாததினால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக குறித்த கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சிறிய குருமடத்திற்கு அண்மித்த பகுதியில் வீதியோரமாக வடிகான் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு வீதியோரமாக அமைக்கப்படும் வடிகாண் அமைப்பதற்கு பள்ளம் வெட்டப்பட்டுள்ளது.
எனினும் வேலை நடைபெறும்பகுதி உட்பட ஏனைய பகுதியில் வெட்டப்பட்ட பள்ளங்களை மக்கள் நடமாட்டத்திலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க குறித்த வடிகாண் அமைக்கும்நிறுவனம் தவறியுள்ளதாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
பகலிலும் குறித்த பகுதியில் பள்ளம் உள்ளதாக அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவில்லை என்பதுடன், விசேடமாக இரவு வேளைகளில் பள்ளத்தை அடையாள படுத்தக்கூடிய விசேட மின்விளக்குகளோ அல்லது லாம்பு (எண்;ணெய் விளக்குகளோ) வைக்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியூடாக பயணிக்கும் மக்கள் இங்குள்ள பள்ளத்தில் விழக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கும் கிராம மக்கள், அதனை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுக்கின்றனர்.
n10