செய்திகள்

அச்ச நிலை தெற்கில் குறைவடைந்திருநதாலும், வட கிழக்கில் தொடர்கிறது: அல் ஹூசைன்

அச்ச சூழ்நிலை தெற்கிலும் கொழும்பிலும் குறிப்பிடத் தக்களவிற்கு குறைவடைந்துள்ளது எனினும் வடக்குகிழக்கில் அது உருமாறியுள்ளது. ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது காணப்படுகின்றது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இலங்கை கடந்த ஓரு வருடத்தில் முன்னேற்றங்களை சந்தித்துள்ளது, ஊடகங்களிற்கு இது நன்கு தெரியும் நீங்கள் விரும்பியதை எழுதுவதற்கு அதிகளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, அச்ச சூழ்நிலை தெற்கிலும் கொழும்பிலும் குறிப்பிடத் தக்களவிற்கு குறைவடைந்துள்ளது எனினும் வடக்குகிழக்கில் அது உருமாறியுள்ளது ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது (அச்சநிலை) காணப்படுகின்றது. அனைவரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்ற போதிலும் இந்த முன்னேற்றத்தின் அளவு குறித்து மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

வெள்ளைவான் கடத்தல்கள் குறித்து தற்போது மிக அபூர்வமாக குறிப்பிடப்படுகின்றது, சித்திரவதைகள் குறித்த முறைப்பாடுகள் குறைவடைந்துள்ள போதிலும்புதிய முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளனஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து தான் வழங்கிய வாக்குறுகளில் இருந்து பின்வாங்குகின்றது என்ற அச்சத்தை பலர் என்னிடம் வெளியிட்டிருந்தனர். எனினும் இன்று காலை இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் தாங்கள் அளித்த வாக்குறுதிகள் குறித்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளனர். என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா தீர்மானம் குறித்து பல கட்டுக்கதைகள் உலாவுகின்றன, இலங்கையர்கள் தீர்மானத்தை புரிந்து கொள்ளவேண்டும், அவர்கள் கடந்தகாலங்களின் பயங்கரங்களை எதிர்கொண்டு அவற்றை தோற்கடிக்க வேண்டும் முன்னைய ஆணையாளர் நவிபிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வேளை காணப்பட்டதை விட தற்போது அதிகளவு சினேகபூர்வமான சூழல் காணப்படுகின்றது.

இலங்கை இராணுவம் பொதுமக்களின் நிலங்களை மீள கையளிப்பதை துரிதப்படுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்