அஜித்தின் ”வலிமை” – சீக்ரட்டாக நடக்கும் சூட்டிங் : வெளியான தகவல்
பெரிய நடிகர்களின் படங்கள் ரசிகர்களிடம் எப்போதுமே பெரிதாக பார்க்கப்படும். அப்படி தான் அஜித்தின் வலிமை படத்தின் மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
படக்குழுவும் அப்டேட்டை விடுவார்கள் என ரசிகர்கள் தினமும் காத்துக் கொண்டிருக்கின்றனர், இதுவரை எந்த தகவலும் இல்லை. படத்தின் நாயகி, வில்லன் என நடிகர்களின் விவரம் கூட வெளியாகவில்லை.
இதுதான் என்று பார்த்தால் படப்பிடிப்பு செய்திகள் கூட சரியாக வரவில்லை. இந்த நேரத்தில் தான் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் சத்தமில்லாமல் நடந்து வருகிறது என்று தகவல் வந்துள்ளது.
இங்கே படப்பிடிப்பு முடிந்ததையடுத்து படக்குழு பிப்ரவரி மாதம் நடுவில் சுவிட்சர்லாந்து செல்ல இருப்பதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. -(3)




