அஜித் பட இயக்குனரை சந்தித்த ராய்லட்சுமி!
சில நடிகைகள் சினிமாவில் என்ட்ரியான சில படங்களிலேயே முன்னணி நடிகையாகி விடுவார்கள். ஆனால் ராய்லட்சுமி சினிமாவில் நடிகையாகி பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டபோதும் இன்னமும் பெரிய இடத்தை பிடிக்கவில்லை. ஆனபோதும், அவர் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். முதன்மை நாயகியாக இல்லையென்றாலும், ஏதோ கேரக்டர்களில் நடித்து தனது ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டு வந்துள்ளார்.
அந்த வகையில், அரண்மனை, சவுகார் பேட்டை படங்களுக்குப்பிறகு இந்தியில் அகிரா, ஜூலி-2 உள்பட சில தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வரும் அவருக்கு தமிழில் புதிய படங்கள் ஏதும் இல்லை. இருப்பினும், அவ்வப்போது வேண்டப்பட்ட டைரக்டர்களை சென்னை வந்து சந்தித்து படவேட்டை நடத்தி செல்கிறார் ராய்லட்சுமி. குறிப்பாக, அஜித்தின் அடுத்த படத்தை வேதாளம் சிவா இயக்குகிறார் என்கிற சேதியறிந்து அவரையும் சந்தித்து சான்ஸ் கேட்டுள்ள ராய் லட்சுமி, மங்காத்தாவில் நடித்தது போன்று ஏதாவது வேடம் இருந்தாலும் கொடுங்கள் என்றும் தனது வேண்டுகோளை முன்வைத்துள்ளாராம்.
N5




