செய்திகள்

அடுத்த வருடம் ரஜினிக்கும், விஜய்க்கும் இப்படி ஒரு மோதல் ஏற்பட இருக்கிறதா?

தமிழ் சினிமாவின் ரேஞ்சே இப்போது வேறு லெவலில் இருக்கிறது. அதிக பட்ஜெட் படங்கள், விருதுகளை அள்ளும் படங்கள், தரமான படங்கள் என வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பல கோடி செலவில் ரஜினி நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் படம் 2.0. இப்படத்திற்கான ஃபஸ்ட் லுக் வெளியீடு மும்பையில் பிரம்மாண்டமாக நடந்தது. அதோடு படமும் 2017ம் ஆண்டு தீபாவளியில் வெளியாகும் என கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய், அட்லீயுடன் இணைந்து ஒரு புதுபடம் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என தெரிகிறது. அதேபோல் இப்படக்குழுவும் படத்தை 2017ம் ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி ரெண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வந்தால் எப்படி இருக்கும், யோசிக்க கூட முடியவில்லை.

N5