அடுத்த வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவித்தல் வெளியாகும்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவித்தல் இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அடுத்த வாரமளவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை புதன்கிழமை தொடக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பணிகளை ஆரம்பிக்க சட்டப்படியான அதிகாரம் கிடைக்கவுள்ளது.
இதன்படி அடுத்த வாரமளவில் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகலாம் என்பதுடன், ஆகஸ்ட் முதலாம் வாரத்தில் வேட்பு மனுக்கோரல் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை செப்டம்பர் இறுதி அல்லது ஒக்டோபர் ஆரம்பத்தில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அதிகாரம் கிடைத்தவுடனேயே தாமதிக்காது தேர்தலுக்கான அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
-(3)




