செய்திகள்

அட்டனிலிருந்து நுவரெலியா சென்ற லொறி விபத்து

அட்டனிலிருந்து நுவரெலியா சென்ற லொறி ஒன்று அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அண்மையில் பிரதான வீதியை விட்டு விலகி  விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று  மாலை 4.00 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும் அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் வீதி வழுக்கியதன் காரணமாகவே இவ்விபத்து நேரந்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் மலையகத்தில் தற்போது மாலை நேரங்களில் இடைக்கிடையே நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பனிமூட்டம் அதிகரிப்பதாகவும் கன மழை பெய்து வருவதனால் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதாகவும் இதனால் வாகன சாரதிகளை வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

vlcsnap-2015-07-09-09h07m19s175 DSC00059