அணி தலைவர் பதவியிலிருந்து தோனி விலகினார்
ஒருநாள் கிரிக்கெட் ரி20 போட்டி இந்திய அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து மகேந்திரசிங் தோனி விலகியுள்ளார்.
ஏற்கனவே டெஸ்ட் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து 2015ஆம் ஆண்டு தோனி விலகினார். அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விலகினாலும் அணியில் தோனி தொடர்ந்து நீடிப்பார் என இந்திய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இந்தியாவின் ஜார்கண்ட்டை சேர்ந்த தோனி 2004யில் பங்களாதே{க்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
2005யில் இலங்கைக்கு எதிரான போட்டி மூலம் டெஸ்ட் அணியில் தோனி கால்பதித்தார். இதுவரை 90 டெஸ்ட்டுகள், 283 ஒருநாள் போட்டிகள், 73 ரி20 போட்டிகளில் தோனி விளையாடியுள்ளார்.
2007யில் ஒருநாள், ரி20 அணிக்கும், 2008யில் டெஸ்ட் அணிக்கும் தோனி தலைவராக நியமிக்கப்பட்டார். இதுவரை 158 ஒருநாள் போட்டி, 251 டெஸ்ட் போட்டிகளுக்கு தோனி தலைவராக பணியாற்றியுள்ளார். 2007யில் ரி20, 2011யில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கிண்ண வெற்றிக்கிண்ண போட்டியில் அணியின் தலைவராக செயல்பட்ட தோனி கிண்ணத்தை கைப்பற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்திய அணியின் புதிய தலைவராக விராட் கோலி தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. -(3)




