செய்திகள்

அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லை : தொழிலாளர்களை ஏமாற்றும் தோட்ட நிர்வாகங்கள்

மலையக தோட்டங்கள் பலவற்றில் கூட்டு ஒப்பந்தத்தில் அதிகரிக்கப்பட்டவாறு சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
பல்வேறு காரணங்களை காட்டி தோட்ட நிர்வாகங்கள் அவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளதாவது,
கூட்டு ஒப்பந்தத்துக்கு அமை வாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத தோட்ட நிர்வாகங்கள் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடாத்தி தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென தெரிவித்தள்ளார். -(3)