அதிகரிக்கும் ஹிந்தி டப்பிங் சீரியல்கள்- தமிழ் டிவி சீரியல் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு
தமிழ் சீரியல்களில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. ஒருபக்கம் சீரியல்களில் அதிக வன்முறை இருக்கிறது என்று பிரச்சனை ஏற்பட்டது. அதேபோல் டப்பிங் சீரியல்கள் அதிகரித்து வருகின்றது என்ற பிரச்சனையும் எழும்பியது.
இதுநாள் வரை மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாச தொடர்களை மட்டுமே டப் செய்து ஒளிபரப்பிய பிரபல தொலைக்காட்சி தற்போது நாகினி என்ற டப் செய்யப்பட்ட புதிய நெடுந்தொடரை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது.
ஏற்கெனவே பல முன்னணி தொலைக்காட்சிகள் டப்பிங் சீரியல்களில் கொடிகட்டி பறக்கின்றன. இந்நிலையில் இந்த பிரபல தொலைக்காட்சியும் டப்பிங் சீரியல்களுக்கு மாறியுள்ளது.
தமிழக சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக நளினி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, டப்பிங் சீரியலை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். ஆனால் தற்போது, சிவன் சீனிவாசன் தலைவராக உள்ள நிலையில், எல்லா தொலைக்காட்சியும் எதிர்ப்பின்றி டப்பிங் களமிறங்கியுள்ளது.
இதுபோன்ற சீரியல்களால் தமிழ் டிவி சீரியல் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
N5




